கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர், செப். 20:  கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர் மணியரசன் தலைமை வகித்தார். பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர் செந்தில்குமார், மாணவர்கள் வெங்கடேஸ்வரன், பூங்குழலி, பால்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.இதில், 5, 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கிராமப்புற மாணவர்கள் கல்வியை பாதிக்கும்.

எனவே இந்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும். தேசிய கல்வி கொள்கை-2019ஐ நிராகரிக்க வேண்டும். ஒரே நாடு ஒரே மொழி இந்தி என்ற இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துகள் தெரிவிப்பதை நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: