வாலிபர் தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி, செப்.19: திருக்காட்டுப்பள்ளி அருகே அலமேலுபுரம்பூண்டி முடியப்பர்கோயில்தெரு ரபேல் மகன் மைக்கேல் (30). இவர் திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6ம் தேதி விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். அவரிடம் தாய் சம்பள பணம் குறித்து கேட்டதாக தெரிகிறது. இதில் திருப்பூரில் நண்பர்களுடன் மதுகுடித்து பணத்தை முழுவதும் செலவு செய்தது தெரியவந்துள்ளது. இதை தாய் கண்டித்தா. இதில் மனமுடைந்த மைக்கேல், எலிபேஸ்ட் விஷம் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி 17ம் தேதி இரவு இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

Advertising
Advertising

Related Stories: