பெரியார் பிறந்த நாள் விழா

பாபநாசம், செப். 19: பெரியார் பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகம் சார்பில் பாபநாசம் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து அவரது படத்துக்கு பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன துணைத்தலைவர் ராஜகிரி தங்கராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் திமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு, பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், மீனவரணி புகழேந்தி ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக உட்பட பல்வேறு கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: