கும்பகோணம் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கும்பகோணம், செப். 17: கும்பகோணம் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ரயில்வே சுகாதார ஆய்வாளர் ஜெயகிருமா தலைமை வகித்தார். இதில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம், சுற்றுப்புற தூய்மை மேம்படுத்துவோம், குப்பைகளை முறையாக பயன்படுத்தி மறு சுழற்சி செய்வோம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களிட்டபடி கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று ரயில் நிலையத்தை அடைந்தது. இதைதொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்கள், ரயில்வே ஊழியர்கள், தொழிலாளர்கள் அனைவரும் பிளாஸ்டிக் ஒழிப்போம், பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிலைய மேலாளர் முருகானந்தம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: