பழவாற்று தரைப்பாலம் சீரமைப்பு இலகுரக வாகனம் செல்ல அனுமதி

கும்பகோணம், செப். 17: கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் இருந்து வேப்பத்தூர் செல்லும் சாலையில் அம்மன்பேட்டை கிராமம் அணக்குடி கிராமம் இடையே போக்குவரத்து பாலம் இருந்தது. இந்த பாலம் பழுதானதால் புதிதாக பாலம் அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக ஆற்றில் தண்ணீர் வந்தால் பொதுமக்கள் சென்று வருவதற்காக குழாய் அமைத்து தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பழவாற்றில் தண்ணீர் வந்ததால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் வேப்பத்தூர் செல்லும் மக்களும், அம்மன்பேட்டையில் இருந்து சோழபுரம் செல்லும் மக்களும் 20 கிலோ மீட்டர் சுற்றி வரும் நிலை ஏற்பட்டது. இதைதொடர்ந்து கிராம மக்களின் கோரிக்கையை அடுத்து கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு மற்றும் அலுவலர்கள் நேற்று மாலை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தரைப்பாலத்தை சீரமைத்தனர். இதைதொடர்ந்து தரைபாலத்தில் இலகுரக வாகனம் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: