குறைதீர் கூட்டத்தில் மனு ரூ.3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

தஞ்சையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.  தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 458 மனுக்களை கலெக்டர் அண்ணாதுரை பெற்றுக் கொண்டார். இதைதொடர்ந்து கலை பண்பாட்டுத்துறை சார்பில் 10 கலைஞர்களுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் மூலம் இலவச இசைக்கருவிகள் வாங்க தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் காசோலை, தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகம் மூலம் முதல்வரின் விபத்து நிவாரணத்தொகை திட்டத்தின்கீழ் 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

Advertising
Advertising

குளத்தை தூர்வார அனுமதி வேண்டும்

கும்பகோணம் சரபோஜியராஜபுரம், விளத்தொட்டி கிராமத்தை சேர்ந்த இயல்வேந்தன் தலைமையிலான விவசாயிகள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் உள்ள பெருமாள் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்துபோய் வயல் போல் மாறி விட்டது. இதனால் ஊர்மக்கள் செலவில் தூர்வாரி அம்மண்ணை எங்களது விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி கொள்ளவும், குளத்தின் கரைகளை பலப்படுத்தி கொள்ளவும் திருவிடைமருதூர் தாசில்தாரிடம் மனு அளித்தோம். ஆனால் அவர் என்னால் அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். எனவே குளத்தை தூர்வாரி செப்பனிட அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: