அதிகாலை டீ குடித்து திரும்பிய பள்ளி காவலாளி வேன் மோதி பலி

திருச்சி, செப்.15: புதுக்கோட்டை மாவட்டம் நாஞ்சூர் எட்டு கல்பட்டியை சேர்ந்தவர் இன்னாசிமுத்து(71). இவர் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் காவலாளியாக இருந்தார். நேற்று முன்தினம் முன்தினம் இரவு பணி என்பதால் பணியில் இருந்தவர் அதிகாலை டீ குடிப்பதற்காக எதிரே இருந்த கடைக்கு சென்று டீ குடித்தார். பின்னர் பள்ளி நோக்கி வந்த போது, அவ்வழியே வந்த கூரியர் வேன் வேகமாக வந்து உடனே வலதுபுறம் திரும்பியது. அப்போது நடந்து வந்த இன்னாசிமுத்து மீது வேன் மோதியது. இதில் கீழே விழுந்தவர் மீது வேன் ஏறியததையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

Advertising
Advertising

இந்த விபத்தை கண்டு வேன் டிரைவர் இறங்கி தப்பியோடிவிட்டார். இது குறித்த தகவலின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து வேனை கைப்பற்றி டிரைவரை தேடி வருகின்றனர். தொடர்ந்து இன்னாசிமுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: