மேற்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இடைப்பாடி, செப்.15: சேலம் மேற்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தொடங்கியது.சேலம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் துரை கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், அம்மாசி, நெசவாளரணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், நகர, ஒன்றிய திமுக செயலாளர்கள் பாஷா, பரமசிவம், நல்லத்தம்பி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பிரபு, கண்ணன், அருள், நகர, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் செந்தில்குமார், முத்தமிழ்செல்வன், நிர்வாகிகள் மாதையன், தங்கவேலு, சிங்காரவேலு, வடிவேலு, ரவி, சரவணமூர்த்தி, பாலு, தனபாரதி, கவுதம், மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

Advertising
Advertising

நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் துரை பேசுகையில், அந்தந்த பகுதியில் அதிகளவிலான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மற்ற மாவட்டங்களை காட்டிலும் சேலம் மேற்கு மாவட்டத்தில் கூடுதல் உறுப்பினர்களை சேர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் பாராட்டு பெற உழைப்போம் என்றார். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கினார். மேட்டூர்:  மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. மேட்டூர் பழைய தாசில்தார் அலுவலகம் முன் நடைபெற்ற முகாமினை சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோபால் தொடங்கி வைத்தார்.

மேட்டூர் நகரம், கொளத்தூர் ஒன்றியம், மேச்சேரி ஒன்றியம் மற்றும் நங்கவள்ளி ஒன்றிய பகுதிகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை காண்பித்து உரிய கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக இணைந்தனர். காலை முதல் மாலை வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்த முகாமில் மேட்டூர் நகர செயலாளர் காசிவிஸ்வநாதன், அவைத்தலைவர் ரஜா, பொருளாளர் ரங்கசாமி, மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாசபெருமாள், சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கொடியரசி, முன்னாள் நகராட்சி தலைவர் கந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் மாதுராஜ் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: