கெங்கவல்லியில் மழை

கெங்கவல்லி, செப்.11: கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்த நிலையில், நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணியளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குடிநீர் பிரச்னை நிலவும் நேரத்தில், ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சேலம் மாநகரில் இரவு 8 மணியளவில் பெய்த மழையால் ஜில் க்ளைமேட் நிலவியது.

Advertising
Advertising

Related Stories: