இவ்வாறு அவர் கூறினார். இரும்பாலை ஊழியர்களுக்கு ேமாகன் குமாரமங்கலம் ஆறுதல்

சேலம், செப்.11: சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து, ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 37வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காங்கிரஸ் செயல் தலைவர் மோகன்குமாரங்கலம் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பேசியதாவது: காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் இருந்தபோதே ₹100 கோடி வட்டி கட்ட வேண்டியுள்ளது. அதனால் இந்த பிளாண்ட் நஷ்டத்தில் ஓடுகிறது என்று கூறப்பட்டது. ஆனால், அம்பானி தொழிற்சாலைகள் நஷ்டத்தில் ஓடவில்லையா? அவர் பல கோடி வட்டி கட்டாமல் உள்ளார். அவருக்கு மற்றொரு வங்கியில் இருந்து கடன் வாங்கி கொடுக்கப்படுகிறது. ₹2 ஆயிரம் கோடி கடனுக்காக ₹100 வட்டி கட்டி முடியாமல் சொத்தை விற்கலாமா?. நாட்டில் தனியார் தொழிற்சாலை தேவைதான். இரும்பாலையை தொடங்க எவ்வளவு பேரிடம் நிலத்தை கையகப்படுத்தி கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆலையாகும். ஒரே பிரச்னையில் விற்க நினைத்தால் நியாயமா?. அது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

Advertising
Advertising

Related Stories: