திருவாடானை-மங்கலக்குடி சாலையில வாகன ஓட்டிகளை காயப்படுத்தும் சீமைக் கருவேல மரங்கள்

திருவாடானை, செப். 11: ,திருவாடானையில் இருந்து மங்கலகுடிக்கு சாலை அமைக்கப்பட்டு பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலையானது திருவாடானையிலிருந்து அஞ்சுகோட்டை, வெளியங்குடி, குஞ்சங்குளம், வழியாக மங்கலக்குடி செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் குறிப்பாக மங்களக்குடி அருகே சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இரண்டு வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும்போது சாலையின் இருபுறமும் உள்ள சீமைக்கருவேல முள் செடிகள் வாகன ஓட்டிகளை காயப்படுத்தி விடுகின்றன.

அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு சாலையின் அருகே செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முள் செடிகளினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது வளர்ந்து வந்து சாலையை ஆக்கிரமித்திருக்கும் இந்த சீமை கருவேல மரங்களை உடனடியாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: