இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது வழக்கு

திண்டுக்கல், செப். 11:  திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. அப்போது அக்கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் தர்மர் (40) ஒரு குறிப்பிட்ட பிரிவினை தரக்குறைவாக பேசியதாக கூறி பேகம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.   இந்நிலையில் தமுமுக, எஸ்டிபிஐ, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் இதுதொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தர்மர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: