மண்டபத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 400 பேருக்கு பரிசோதனை

மண்டபம், செப்.10: மண்டபத்தில் வட்டார அளவிலான தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் தலைமை வகித்தார். மண்டபம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பாக்யநாதன் வரவேற்றார். டாக்டர்கள் ஜான், கிளாரட், ஸ்டபனோ, ராஜசேகர பாண்டியன், பிரஷாந்த் ஆகியோர் குழந்தை மருத்துவம், பொது மருத்துவம், தோல், இருதயம், எலும்பு சிகிச்சை, மகளிர் நல சிசிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர். 40 ஆண் குழந்தைகள், 51 பெண் குழந்தைகள் உள்பட 400க்கும் மேற்பட்டோருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இசிஜி, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைக்கு பிறகு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.

பெண்களுக்கு மார்பகம், கர்ப்ப வாய் புற்று நோய் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. கண் மருத்துவ உதவியாளர் டேனியல் ஜோசப் கண் பரிசோதனை செய்தார். உயர் சிகிச்சைக்காக 3 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.தோல், காச நோய் சிகிச்சை, டெங்கு தடுப்பு, ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தன. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் வட்டார செவிலியர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: