துறையூர் தாலுகா அலுவலகத்தில் சிதிலமடைந்து கிடக்கும் வட்ட வழங்கல் அலுவலகம்

துறையூர், செப்.10: துறையூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகம் சிதலடைந்து கிடப்பதால் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துறையூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அலுவலகம் பின்புறம் வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 50 வருடத்திற்கு மேல் இருக்கும். தற்பொழுது இந்த அலுவலகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான அடையாள அட்டைக்கு பதிவு செய்ய, பெயர் மாற்றம், முகவரி மாற்றுதல் அனைத்திற்குமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வட்ட வழங்கல் அலுவலக கட்டிடத்தின் ஓடுகள் உடைந்து சிதிலமடைந்து கிடக்கின்றன. இதனால் மழைக்காலத்தில் அதில் உள்ள ரெக்கார்டு பதிவேடுகள் அலுவலகத்தில் கணினி, பதிவேடுகள் நனைந்து வீணாகும் நிலைமையில் உள்ளது. காற்றில் ஓடுகள் உடைந்து விழுவதால் மழைநீர் சேகரிப்பு கட்டப்பட்ட தகடுகள், ஓடுகள் உடைந்து பராமரிப்பின்றி கீழே தொங்கி கொண்டிருக்கிறது.

Advertising
Advertising

இதை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் செல்கின்றனர். மேலும் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் வட்ட வழங்கல் அலுவலகம் செல்லும்போது ஓடுகள் தலையில் விழுந்து விடுமோ என்ற பயத்தில் உள்ளே சென்று வருவதாக கூறுகின்றனர். துறையூர் தாலுகா அலுவலகத்திற்கு தினமும் 1000க்கு மேற்பட்டவர்கள் தங்கள் குறைகளை தீர்ப்பதற்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு குடிநீர்வசதி, கழிவறை வசதி ஏதும் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாகவும் சிரமமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும் எனவும், குடிநீர், கழிவறை பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: