மணப்பாறையில் 14ம்தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் பங்கேற்க அழைப்பு

திருச்சி, செப்.10: திருச்சி மாவட்டம், மணப்பாறை பொறியியல் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 14ம்தேதி (சனி) நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 14ம் தேதி (சனிக்கிழமை) மணப்பாறை வட்டம் குறிஞ்சி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். வேலை வாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தோல்வி, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகள், பிஇ வரை படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

Advertising
Advertising

மேலும் விபரங்களுக்கு 0431-2413510 அல்லது வாட்ஸ்ஆப் 9499055902 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி முற்றிலும் இலவசம், எவ்வித பதிவு கட்டணம் இல்லை, வேலை நாடுநர்கள் தங்களது முழு சுய விவரக்குறிப்பு நகல்கள், அனைத்து கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பை தோ்வு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: