திரவுபதி அம்மன் கோயில் விழாவில் அரக்கர்களை விரட்டிய பீமன்

ஆர்.எஸ்.மங்கலம், ஆக. 22:  ஆர்.எஸ்.மங்கலத்தில் திரவுபதி அம்மன் கோயில் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இந்த கோயில் விழாவில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டப்பட்டு ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று ஆர்.எஸ்.மங்கலம் கிராமமக்கள் மண்டகப்படியை முன்னிட்டு, பீமன் வேடமிட்டு அரக்கர்களை துரத்தும் நிகழ்ச்சி நடந்தது. பீமன் வேடம் மற்றும் அரக்கர்கள் போல் வேடமிட்டு பக்தர்கள் வீதியில் வந்தார்கள். அவர்களில் பீமன் வேடமிட்டவர்கள், அரக்கர்களை துரத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 24ம் தேதி பூக்குழி இறங்கும் விழா நடைபெறுகிறது. விழாவில் சுற்றுவட்டாரக் கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: