நத்தத்தில் 10 ஆயிரம் மரக்கன்று நட திட்டம்

நத்தம், ஆக. 22: நத்தம் அம்மன் குளம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. பேரூராட்சி செயல்அலுவலர் சரவணக்குமார் தலைமை வகித்து மரக்கன்றை நட்டு துவங்கி வைத்தார். இதில் துணை தாசில்தார் மாயழகர், வர்த்தகர்கள் சங்க தலைவர் சேக்ஒலி, துப்புரவு ஆய்வாளர் சடகோபி, போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரவி, கிராம நிர்வாக அலுவலர்கள் முருகவேல், சுரேஷ், சுரேந்திரன், கொண்டல்ராஜ் மற்றும் பசுமை நத்தம் குழு இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். வேம்பு, புங்கன், பாதாம், ஆல் போன்ற பல வகை மரக்கன்றுகள் நடப்பட்ட.

இதுகுறித்து பசுமை நத்தம் குழுவை சேர்ந்த இளைஞர்கள் கூறுகையில், ‘நத்தம்- மதுரை இடையே அமையும் நான்கு வழிச்சாலைக்காக ஆயிரக்கணக்கில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. எனவே அதை ஈடுசெய்யும் வகையில் சுற்றுச்சுழலை பாதுகாக்கவும், மழை பெய்ய வேண்டியும் இப்பகுதியில் சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க இலக்கு நிர்ணயித்து தொடங்கியுள்ளோம். இந்த பணியில் அனைவரும் பங்கேற்று இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி எடுப்போம்’. என்றனர்.

Related Stories: