கொடைக்கானல் சேமிப்பு கிடங்கில் சட்டமன்ற பேரவை குழு ஆய்வு

கொடைக்கானல், ஆக. 22: கொடைக்கானலில் தமிழ்நாடு வாணிப கழக சேமிப்பு கிடங்கில் சட்டமன்ற பேரவை முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் ஆய்வு செய்தனர். கூட்டுறவு உணவு பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் 2011- 12 முதல் 2016-17 வரையிலான ஆண்டறிக்கை சட்டப்பேரவையில் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து சட்டமன்ற பேரவை முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழு தலைவர் சத்யநாராயணா தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த குழுவில் எம்எல்ஏக்கள் ஆடலரசன், கஸ்தூரி வாசு, சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துறைரீதியான ஆண்டறிக்கையினை காலதாமதமாக பேரவைக்கு சமர்ப்பிக்கும் போது காலதாமதத்திற்கான காரணங்களை அந்தந்த துறைகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இடம் பெற்று அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இக்குழு தமிழ்நாடு வாணிப கழக தாமத அறிக்கை பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

Advertising
Advertising

நேற்று கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு தமிழ்நாடு வாணிக கழகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கினை இக்குழுவினர் பார்வையிட்டனர். அங்கு பொருட்களின் இருப்பை சரியான அளவில் வைத்திருக்கவும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவும் இக்குழுவினர் அறிவுறுத்தினர். ஆய்வின் போது கொடைக்கானல் டிஆர்ஓ சுரேந்திரன், தாசில்தார் வில்சன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: