கதிராமங்கலம் கச்சா எண்ணெய் கிணற்றில் மராமத்து பணிக்காக வந்த இயந்திரங்களால் பரபரப்பு

கும்பகோணம், ஆக. 22: கதிராமங்கலத்தில் உள்ள கச்சா எண்ணெய் கிணற்றில் மராமத்து பணி செய்வதற்காக இயந்திரங்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கும்பகோணம் அடுத்த கதிராமங்கலத்தில் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக கிராம மக்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓராண்டாக போராட்டம் நடத்தினர். பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் கதிராமங்கலம் கோயிலுக்கு பின்புறமுள்ள எண்ணெய் கிணற்றில் மராமத்து பணிகள் செய்வதற்காக ராட்ஷத இயந்திரங்கள் வந்திறங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் இயந்திரங்கள் வந்ததால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமார் கூறுகையில்,கதிராமங்கலத்தில் உள்ள 35 எண் கொண்ட எண்ணை கிணற்றில் மராமத்து பணி செய்வதற்காக இயந்திரங்களை கொண்டு வந்து வைத்துள்ளனர். எண்ணெய் நிறுவனம் சார்பில் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மராமத்து பணி வரும் 26ம் தேதி துவங்கும் என்று தெரிகிறது என்றார்.

Related Stories: