குடந்தையில் பலத்த மழை தஞ்சை மாவட்ட ஊராட்சிகளில் இன்று சிறப்பு குறைதீர் கூட்டம்

தஞ்சை, ஆக. 22: தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இன்று சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்று பயன்பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ள சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை அழைப்பு விடுத்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விதி எண்.110ன்கீழ் கடந்த ஜூலை 18ம் தேதி முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை நடத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். இதன்படி நகரங்கள், வார்டுகள் மற்றும் கிராமங்கள் தோறும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்துறை, நகர்ப்புற நிர்வாகத்துறை ஆகிய அனைத்து துறை அலுவலர்களை கொண்ட குழுக்கள் நேரடியாக சென்று மனுக்களை வரும் 31ம் தேதிக்குள் பெற வேண்டும். பெற்ற மனுக்கள் மீது ஒரு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சிறப்பு திட்டம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் செயல்படவுள்ளது.

முதல் கட்டமாக இன்று (22ம் தேதி) தஞ்சை வட்டம் வல்லம் சரகத்தில் வல்லம் வடக்கு, ராமாபுரம் சரகத்தில் கொண்டவிட்டான்திடல், நாஞ்சிக்கோட்டை சரகத்தில் கொல்லாங்கரை, திருவையாறு வட்டம் கண்டியூர் சரகத்தில் முகாசாகல்யாணபுரம், தென்பெரம்பூர், திருவையாறு சரகத்தில் கடுவெளி, மகாராஜபுரம், நடுக்காவேரி சரகத்தில் மன்னார்சமுத்திரம், திருவாலம்பொழிலில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.ஒரத்தநாடு வட்டத்தில் காவாலிப்பட்டி சரகத்தில் பெரியக்கோட்டைக்காடு, வெங்கரை, சில்லத்தூர் சரகத்தில் வேதநாயகிபுரம், அக்கரைவட்டம், தெக்கூர் சரகத்தில் கக்கரைப்கோட்டை, ஆயங்குடி, பூதலூர் வட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி சரகத்தில் கண்டமங்கலம், தீட்சசமுத்திரம், பூதலூர் சரகத்தில் தொண்டராயன்பாடி, ஆவாரம்பட்டி, அகரப்பேட்டை சரகத்தில் மகாதேவபுரம், கச்சமங்கலத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது.
Advertising
Advertising

மேலும் செங்கிப்பட்டி சரகத்தில் ஆச்சம்பட்டி, செங்கிப்பட்டி, கும்பகோணம் வட்டத்தில் தேவனாஞ்சேரி சரகத்தில் நீரத்தநல்லூர், முருக்கங்குடி சரகத்தில் விளங்குடி, நாச்சியார்கோயில் சரகத்தில் கொத்தங்குடி, பாபநாசம் வட்டத்தில் அம்மாப்பேட்டை சரகத்தில் உக்கடை, கபிஸ்தலம் சரகத்தில் கோவிந்தநாட்டுச்சேரி, பாபநாசம் சரகத்தில் பாபநாசம், திருவிடைமருதூர் வட்டத்தில் பந்தநல்லூர் சரகத்தில் காவனூரில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது.அதேபோல் திருப்பனந்தாள் சரகத்தில் மகாராஜபுரம், கதிராமங்கலம் சரகத்தில் பாஸ்கரராஜபுரம், பட்டுக்கோட்டை வட்டத்தில் நம்பிவயல் சரகத்தில் ஆனந்தகோபாலபுரம் வடக்கு, நடுவிக்கோட்டை, பெரியக்கோட்டை சரகத்தில் புளியக்குடி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி சரகத்தில் பொன்னவராயன்கோட்டை உக்கடை, பொன்னவராயன்கோட்டை வெண்டாக்கோட்டை, பேராவூரணி வட்டத்தில் குருவிக்கரம்பை சரகத்தில் சாந்தாம்பேட்டை, கருவிக்கரம்பை ஆகிய கிராம ஊராட்சிகளில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு வரும் அனைத்து துறை அலுவலர்களை கொண்ட குழுக்களிடம் கோரிக்கை மனுக்களை முக்கியமாக சாலை வசதி கோருதல், தெருவிளக்கு கோருதல், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: