ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஆக.20: ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரி திருச்சியில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழ் மாநிலகுழு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில அமைப்பு குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மச்சராஜன், கோவிந்தசாமி, சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அனைத்து விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் கோகுல கிறிஸ்டீபன் சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். தமிழகத்தை விவசாய மாநிலமாக பாதுகாக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும், ஆறு, குளம், குட்டை, கால்வாய்களை தூர்வார வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்த வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Related Stories: