நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்

பட்டுக்கோட்டை, ஆக. 20: பட்டுக்கோட்டை அடுத்த புனல்வாசலில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் சவரிமுத்து தலைமை வகித்தார். செயலாளர்கள் செபஸ்தியார், பொன்ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கல்லணை கால்வாய் ஈச்சன்விடுதியில் 500 கன அடி தண்ணீர் திறந்து செருவை அருகில் உள்ள நவக்குழி ரெகுலேட்டரில் கடைமடை பாசன பகுதிகளான சேதுபாவாசத்திரம் தாய் வாய்க்காலிலும், புதுப்பட்டினம் தாய் வாய்க்காலிலும் உள்முறை வைப்பதை தவிர்த்து முழு அளவு தொடர்ந்து தண்ணீர் வழங்குவதோடு கடைமடை வரை தண்ணீர் சேரும் வரை மதகு ஷட்டர்கள் திறப்பதை நிறுத்தி வைத்து பின்னர் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆரோக்கியம் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: