குடும்ப அட்டைகளில் ஆதார் பதிவு செய்ய வேண்டும்

கோவை, ஆக.20:  குடும்ப அட்டைகளில் ஆதார் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்ட பொதுவிநியோகத் திட்டம் மின்னணு குடும்ப அட்டைகளில் ஆதார் பதிவு செய்வது தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை பதிவு செய்யாத 24 ஆயிரத்து 911 பேர் யு.ஐ.டி.ஏ.ஐ திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தைகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் மையத்திலும், குறிப்பிட்ட தபால் நிலையங்களிலும், ஆதார் எடுத்த தரப்பட்டு வருகிறது. எனவே ஆதார் எடுத்து அதனை மின்னணு குடும்ப அட்டையில் இணைக்காதவர்கள் அவரவர் எல்லைக்குட்பட்ட குடிமைப்பொருள் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை நாட்களில் ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை ஆகியவற்றை கொண்டு சென்று பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. வரும் 31ம் தேதிக்குள் மின்னணு குடும்ப அட்டைகளில் ஆதார் பதிவு மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: