கட்டுமான பொருட்கள் விலையேற்றம் பிரதம மந்திரி திட்டத்தில் வீடுகட்ட தயங்கும் மக்கள்

பரமக்குடி, ஆக.14:   மத்திய அரசின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்ட 1 லட்சத்து 70 ஆயிரமும், தனிபர் கழிப்பிடம், வேலை உறுதி திட்டத்தில் சம்பளம் சேர்த்து ரூ.2 லட்சத்து 5ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன்படி போகலூர், நயினார்கோவில், பரமக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் 30 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலக்கை எட்டாத ஊராட்சிகளுக்கு மண்டல துணை பி.டி.ஓ. ஆகியோருக்கு விளக்கம் கேட்டு உயர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மக்களுக்கு செயல்படும் திட்டத்தில் செலவு தொகையை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வீடுகட்ட வேண்டும் என்றால், பயனாளிகள் மேலும் பணம் செலவு செய்ய வேண்டியதால், வீடுகட்ட தயக்கம் காட்டி வருகின்றனர். கட்டிட பொருள்களின் விலை ஏற்றம், மணல் தட்டுப்பாடு காரணமாக இந்த திட்டத்தை கேட்டால் பொதுமக்கள் அதிகாரிகளிடம், எங்களை விட்டு விடுங்கள் என்ற தோரணையில் தலை தெரிக்க ஓடுகின்றனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி அதிகாரிகள் கூறுகையில், சாதிவாரியான கணக்கெடுப்புப்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை தேர்வு செய்து இந்த திட்டத்தில் சேர்த்துள்ளோம். பணம் கொடுத்தாலும் போதுமானதாக இல்லை என்று கூறி வீடுகட்ட மறுக்கின்றனர். திட்டத்தில் பயனாளியாக இருந்தும் முதல் கட்ட தவணை பெற்றுக் கொண்டும் வீடு கட்டும் பணியை துவங்காமல் அடம் பிடித்து வருகின்றனர். அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவர்களுக்கு பதில் கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என்றார்.

Related Stories: