பொதுமக்கள் புகார் கொடைக்கானலில் தேசிய காப்புரிமை ஆய்வு கூட்டம்

கொடைக்கானல், ஆக. 14: கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையத்தில் தேசிய அளவிலான காப்புரிமை ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு தொழில்நுட்ப மாநிலம் மன்றம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இக்கூட்டத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து தேசிய அறிவியல் தொழில்நுட்ப துறையில் உள்ள விஞ்ஞானிகள், உயர் அலுவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். டெல்லி தேசிய அறிவியல் தொழில்நுட்ப துறை விஞ்ஞானி ரவீந்தர் கவுர் தலைமை வகித்தார். கூட்டத்தில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் காப்புரிமை தருவதற்கு உரிய பணிகளை செய்வதற்கும், எதிர்காலத்தில் காப்புரிமை கோருபவர்களுக்கும் எந்த விதமான அடிப்படையில் காப்புரிமை வழங்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இதற்கு உரிய நிதி ஒதுக்கீடு பற்றியும், காப்புரிமை பெறுவதற்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியும் ஆலோசித்தனர். இதில் தமிழ்நாடு தொழில்நுட்ப அறிவியல் மன்ற செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு காப்புரிமை- வடிவமைப்பு துறை உதவி கட்டுப்பாட்டாளர் தங்கபாண்டியவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடந்த இக்கூட்டம் முடிந்தது.

Advertising
Advertising

Related Stories: