ஜலகண்டாபுரத்தில் நாளை  நிவாச பெருமாள் திருக்கல்யாணம்

ஜலகண்டாபுரம், ஆக 14: வேலூர் மாவட்டம் திருமலைக்கோடி புரம் நாராயணி பீடத்தின் சார்பில், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் நங்கவள்ளி மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராமலிங்க செட்டியார் கிருஷ்ணவேணி அம்மாள் கல்யாண மண்டபத்தில் நாளை 15ம் தேதி(வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஒரு வருடமே ஆன நிலையில் தற்போது ஸ்ரீ லட்சுமி நாராயணி கோயிலில் இருந்து வருகைதந்து முதல் முறையாக ஜலகண்டாபுரத்தில் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாணம் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்களுடன் நடைபெற உள்ளது. அருள்திரு ஸ்ரீ சக்திஅம்மா அருள் ஆசியுடன் நடைபெறவிருக்கும் இத்திருக்கல்யாணத்தில் பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு இறைவன் அருள் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஸ்ரீ நாராயணி பக்த சபா குழுவினர் செய்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: