காவிரியில் தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஈரோடு, ஆக.14: காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. படிப்படியாக 10 ஆயிரம் கனஅடி வரை உயர்த்தப்பட உள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் காவிரிக்கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும். மேலும், காவிரி ஆற்றில் சிறுவர்கள், இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் நீச்சல் அடிப்பது மீன்பிடிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, செல்பி எடுப்பது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கு வருவாய்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை மூலம் தண்டோரா போடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறி உள்ளார்.

Advertising
Advertising

Related Stories: