100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் சாலை மறியல்

புழல், ஆக. 14: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி சோழவரம் அடுத்த அருமந்தை கூட்டு சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சோழவரம் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி சோழவரம் அடுத்த அருமந்தை கூட்டு சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோதண்டன் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர்கள் வேல்மணி, அபிமன்யு, சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் பேசினர்.  இதனையடுத்து அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.

Related Stories: