பேராவூரணி கூட்டுறவு வங்கி கட்டிடத்தின் முகப்பு பகுதி சன்சைடு பெயர்ந்து விழுந்தது

பேராவூரணி, ஆக. 14: பேராவூரணியில் உள்ள கூட்டுறவு வங்கி கட்டிடத்தின் முகப்பு பகுதி சன்சைடு பெயர்ந்து விழுந்தது.பேராவூரணி கடைவீதியில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை உள்ளது .இந்த வங்கிக்கு தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள், ஆசிரியர்கள் வங்கி பணிகளுக்காக வந்து செல்வது வாடிக்கை. இந்நிலையில் நேற்று மதியம் வங்கியின் முன்பக்கம் உள்ள சன்சைடு திடீரென பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் எவரும் அந்த பகுதியில் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை மராமத்து செய்ய வேண்டுமென வங்கி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: