பூதலூர் தாலுகாவில் 8 கிராமங்களில் முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

திருக்காட்டுப்பள்ளி, ஆக14: பூதலூர் தாலுகாவில் 8 கிராமங்களில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.தமிழக முதல்வர் சட்டபேரவையில் விதி எண்.110ன் கீழ் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் “முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு கூட்டங்கள்” கிராமம்தோறும் நடத்தி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கணினியில் பதிவேற்றம் செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வாரத்துக்குள் அனுப்பி மனு மீது ஒரு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.அதன்படி நேற்று (13ம் தேதி) பூதலூர் தாலுகாவில் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் இந்தளுர், கடம்பங்குடியிலும், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராமலிங்கம் தலைமையில் விஷ்ணம்பேட்டை, விட்டலபுரத்திலும், தலைமையிடத்து துணை தாசில்தார் பெர்சியா தலைமையில் தோகூர், பாதிரகுடியிலும், மண்டல தாசில்தார் திரிபுரசுந்தரி தலைமையில் சொரக்குடிப்பட்டி, வெண்டயம்பட்டியிலும் சிறப்பு குறை தீர்வு கூட்டங்கள் நடந்தன. பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.

Advertising
Advertising

Related Stories: