கடைமடை விவசாயிகள் வலியுறுத்தல் வைத்தியநாதன்பேட்டையில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்

திருவையாறு, ஆக. 14: திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.32 லட்சத்தில் 32 குளங்கள் குடிமராமத்து பணியின் மூலம் தூர்வாரும் பணி துவங்கியது. வைத்தியநாதன்பேட்டை, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனவாசல், கண்டியூர், நடுக்காவேரி, கோனேரிராஜபுரம் போன்ற கிராமங்களில் உள்ள குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்படவுள்ளன.இதையொட்டி ஆச்சனூர் கிராமத்தில் உள்ள குளத்தில் தூர்வாரும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. திருவையாறு நிலவங்கி தலைவர் இளங்கோவன், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள் சாமிநாதன், லதா, ஊராட்சி ஒன்றிய உதவி மேற்பார்வையாளர் ரமேஷ் உள்ளி–்ட்ட பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: