கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

திண்டுக்கல், ஆக. 11: திண்டுக்கல் விஸ்வகர்ம அறக்கட்டளை, கல்வி நலச்சங்கம் சார்பில் 22ம் ஆண்டு கல்வி பரிசு வழங்கும் விழா நடந்தது. விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் கந்தசாமி தலைமை வகிக்க, கல்வி நலச்சங்க தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். 10, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை, சான்றிதழை மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணி வழங்கினார். செயலாளர் பொன்னலங்காரம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன் செய்திருந்தார்.

Advertising
Advertising

Related Stories: