அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

மணமேல்குடி, ஜூலை 24: மணமேல்குடியில் தெற்கூர் முத்துமாரியம்மன் கோயில் ஆடி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.இதையொட்டி ஒவ்வொரு நாளும் மண்டகபடிகாரர்களால் அம்மனுக்கு சந்தனபிஷேகம், பாலாபிஷேகம் செய்து பூஜைகள் நடத்தினர். மணமேல்குடி அய்யனார் கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி, கரும்பு தொட்டில் குழந்தை, பறவை காவடி எடுத்து வந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னியில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா நாட்களில் இன்னிசைக்கச்சேரி மற்றும் புராணநாடகங்கள் நடைபெற்றது. விழா ஏற்பாட்டை மணமேல்குடி கிராமத்தினர் செய்திருந்தனர் .

Related Stories: