ஆரல்வாய்மொழி பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு அபராதம்

ஆரல்வாய்மொழி, ஜூலை 19:  ஆரல்வாய்மொழி பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.குமரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது களியக்காவிளையில் இருந்து பணகுடி நோக்கி 3 லாரிகள் மரத்தடிகள் ஏற்றி கொண்டு வந்தன. மேலும் மற்றொரு மினி லாரி கருங்கல் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டு இருந்தது.

  அவற்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்த போது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 4 லாரிகளையும் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது போன்று அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர் தெரிவித்தார்.

Related Stories: