நகை திருடிய 2 பேர் கைது

பாபநாசம், ஜூலை 19: பாபநாசம் அருகே வழுத்தூர் ஆற்றங்கரை தெரு புருஷோத்தமன். இவரது வீட்டில் இரண்டரை பவுன் நகைகள் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த பசுபதிகோயில் சித்ரகுமார் (28), மாத்தூர் பட்டித்தோப்பு லிங்கத்தடிமேடு மணி (35) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் நகை திருடியதை ஒப்பு கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: