அப்பர் கயிலை காட்சி விழாவையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி

திருவையாறு, ஜூலை 19: காவோp ஆற்றில் பொதுமக்கள் குளித்து தா;பனம் செய்வதற்காக பேரூராட்சி சாபில் துப்புரவு பணிதிருவையாறில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, அப்பர் கயிலைகாட்சி விழா சிறப்பாக நடைபெறும். அன்று ஒருநாள் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஐயாறப்பரை வழிப்பட்டு செல்வர். அன்றிரவு ஐயாறப்பர் கோவில் தென்கயிலாயத்தில் அப்பர்பெருமானுக்கு கயிலை காட்சி நிகழ்ச்சி நடைபெறும். இதில் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து அப்பர் கயிலை காட்சியை கண்டு செல்வர்.வரும் 31ம் தேதி திருவையாறில் ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி விழா நடக்கிறது. விழாவையொட்டி திருவையாறு பேரூராட்சி சார்பில் புஷ்யமண்டப காவிரி ஆற்றுபடித்துறை, காவிரி ஆறு முழுவதும் குவிந்து கிடந்த குப்பைகள், துணிகள், பிளாஸ்டிக் பொருட்கைள பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்றினர். மேலும் யாரும் குப்பை, பிளாஸ்டிக் பொருட்களை காவிரி ஆற்றில் வீசாமல் அதற்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பண்ணை மகளிர் குழுவுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

பட்டுக்கோட்டை, ஜூலை 19: பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மைத்துறையின்கீழ் செயல்படும் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் பண்ணை மகளிர் குழுவுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, வீரக்குறிச்சி கிராமத்தில் நடந்தது. பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சங்கீதா தலைமை வகித்து பேசுகையில், வேறு எந்த இயற்கை உரங்களிலும் இல்லாத அளவுக்கு இந்த உரத்தில் 160 சதம் தழைச்சத்து, 0.57 சதம் மணிச்சத்து, 1.04 சதம் சாம்பல் சத்து, 0.38 சதம் கந்தகம், 0.37 சதம் மெக்னீசியம், 0.35 சதம் சுண்ணாம்பு மற்றும் துத்தநாக, மாங்கனீசு, இரும்பு, தாம்பிரம், போரான், மாலிப்டினம் என்ற அளவில் பேரூட்டங்களும், நுண்ணூட்டங்களும் மண்புழு உரத்தில் நிறைந்து கிடக்கின்றன. இதை பயன்படுத்துவதால் விளைச்சல் அதிகரிப்பதுடன் விளைப்பொருளின் சுவை, தரம், எடை அதிகரிக்க செய்கிறது. இவ்வாறு பயன்கள் நிறைந்த உரத்தை தாங்களே உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டும் என்றார்.

பயிற்சியில் பட்டுக்கோட்டை தென்னை ஒட்டுப்பணி மைய வேளாண்மை அலுவலர் பார்வதி பேசுகையில், மண்புழு உரம் இடுவதால் ரசாயன உரம் இடும் அளவானது 30 சதவீதம் வரை குறைத்து கொள்ளலாம் என்றார்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா பேசினார். அப்போது மண்புழு உரக்கூடம் அமைப்பதற்கு சில்க்பாலினை பயன்படுத்தி சிக்கனமான முறையில் பண்ணை கழிவுகளை கொண்டு மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தார்.

Related Stories: