ஆங்கில மருந்து கடைகளில் சித்த மருந்துகள் விற்பதை தடை செய்ய வேண்டும் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை

தா.பேட்டை, ஜூலை 18: முசிறியில் ஒருங்கிணைந்த மரபுவழி சித்த மருத்துவர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சித்த மருத்துவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசினார். கூட்டததில் ஆங்கில மருந்து கடைகளில் சித்தா உள்ளிட்ட ஆயுஸ் மருந்துகளை விற்பனை செய்வதை மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும். மரபுவழி மருத்துவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மலைகள், வனப்பகுதிகளில் மூலிகைகள் பறிக்க செல்ல சித்த மருத்துவர் என்ற அடையாள அட்டை வழங்க வேண்டும். கோயில், பள்ளி வளாகங்கள், ஆற்றுப்படுகைகள், குளம், குட்டைகளில் உள்ள அரசு நிலங்களில் மூலிகை செடிகள் வளர்த்திட அரசு ஆவணம் செய்ய வேண்டும். பள்ளிகளில் சித்த மருத்துவத்தை பாடமாக வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சித்த மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: