துறையூர் நகராட்சியில் குடிநீர், சுகாதார வசதி வார்டு மக்கள் மனு

துறையூர், ஜூலை 18: துறையூர் 8வது வார்டில் குடிநீர், சுகாதார வசதி கோரி பொதுமக்கள் நகராட்சியில் மனு அளித்தனர். துறையூர் 8வது வார்டு மக்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் வழங்கப்படுகிறது. உப்புநீர் கடந்த 3 மாதங்களாக வழங்கப்படவில்லை. வார்டுக்குள் இருக்கும் கழிவறையில் தண்ணீர் இல்லாததால் அதனை பயன்படுத்த முடியாத அளவில் அசுத்தமாகவும், துர்நாற்றமாகவும் உள்ளது. மேலும் 8வது வார்டு தெருக்களில் உள்ள சாக்கடைகளிலிருந்து கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் எடுத்து வாரக்கணக்கில் அகற்றாமல் அப்படியே விட்டு விடுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அந்த வார்டு மக்கள் தங்களுக்கு போதிய குடிநீர் வழங்க வேண்டும், கழிவறை, சாக்கடைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று நேற்று நகராட்சியில் உள்ள உதவி பொறியாளரிடம் மனு அளித்தனர்.

Advertising
Advertising

Related Stories: