தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

திருச்சி, ஜூலை 18: தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணையில் டெல்லி, நாகை உள்ளிட்ட இடங்களில் 11க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் திருச்சி ரயில் நிலையத்தில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.ரயில்வே எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில் ரயில்வே டிஎஸ்பி சுப்பிரமணி தலைமையில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஜங்ஷன் ரயில் நிலையம், பிளாட்பாரம், பார்சல் அலுவலகம் ஆகிய இடங்களில் போலீசார் வெடிகுண்டு சோதனை, பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்பட்டது. நேற்று காலை ஜங்்ஷன் ரயில் நிலையம் வந்த எர்ணாகுளம், வைகை எக்ஸ்பிரஸ், தேஜாஸ் சாதப்தி, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது. இதனால் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertising
Advertising

Related Stories: