18 வயதுக்குட்பட்டோர் வாகனங்கள் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை

குமாரபாளையம், ஜூலை 18:குமாரபாளையம் வேமங்காட்டு வலசு அரசு உயர்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் அறிவியல் மன்ற துவக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கௌரி தலைமை தாங்கி பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காந்திநாச்சிமுத்து முன்னிலை வகித்தார். ஆசிரியை அம்சா வரவேற்றார். விழாவில் குமாரபாளையம் நெடுஞ்சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரங்கநாதன் பேசுகையில், ‘இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மது போதையிலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை ஓட்டக்கூடாது. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சிறப்பாக வாகனம் ஓட்டினாலும், 18வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் இடமில்லை. விதிமுறை மீறி வாகனங்களை ஓட்டுவது கண்டு பிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும்,’ என்றார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார். விழாவில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகள் பேசினர்.  இதில்  ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

Related Stories: