ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சிறப்பு முகாம்

ஈரோடு, ஜூலை 18:  ஈரோடு ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் வீட்டு வசதி கடன் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.   ஈரோடு முனிசிபல் காலனி, சக்தி விநாயகர் கோயில் அருகில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் சிறப்பு வீட்டு வசதி கடன் முகாம் நாளை நடக்கிறது. வீட்டு மனை வாங்கவும். வீடு மற்றும் அடுக்குமாடி கட்டிடம் வாங்கவும், வீடு பழுது பார்க்கவும், விஸ்தரிக்கவும், வணிக வளாகம் கட்டவும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகையாக நிர்வாக கட்டணம் 0.50சதவீதம் மற்றும் செயல் முறை கட்டணம் 0.25 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. முகாமிற்கான ஏற்பாடுகளை கிளை முதன்மை மேலாளர் மோகன் மற்றும் வங்கி அதிகாரிகள் செய்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: