சந்திரகிரகணம் எதிரொலி சுசீந்திரத்தில் ஒரு மணிநேரம் தாமதமாக நடை திறப்பு

நாகர்கோவில், ஜூலை 18: சந்திரகிரகணம் காரணமாக சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஒரு மணி நேரம் தாமதமாக நேற்று நடை திறக்கப்பட்டது.  சந்திரகிரகணம் நேற்று அதிகாலை 1.14 மணி முதல் 4.15 வரை காணப்பட்டது. இதனால் கோயில்களில் நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு பகவதி அம்மன் உள்பட அனைத்து சுவாமி விக்ரகங்களும், தர்ப்பைப்புல் மற்றும் பட்டுத்துணியால் மூடப்பட்டது.  மேலும் வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடை நேற்று காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதன் பின்னரே பக்தர்கள் கோயிலில் அனுமதிக்கப்பட்டனர். இதனை போன்று சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ேகாயிலில் வழக்கமாக 4.30 மணிக்கு நடை திறப்பு என்பது நேற்று ஐந்து மணிக்கு நடைபெற்றது. மேல்சாந்தி உள்ளிட்டோரும் தாமதமாகவே கோயிலுக்கு வருகை தந்தனர். பரிகார பூஜைகள் நடைபெற்ற பின்னர் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: