பெல், இந்திய கொள்கலன் கழகம் இணைந்து ஹரித்துவாரில் ரயில்வே அனுப்புகை முனையம் வசதி ஏற்படுத்த ஒப்பந்தம்

திருச்சி, ஜூலை 16: பெல் மற்றும் இந்திய கொள்கலன் கழகம் இணைந்து ஹரித்துவாரில் ரயில்வே அடிப்படையிலான அனுப்புகை முனையம் வசதி ஏற்படுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) இன் மூலோபாய இருப்பிடம் மற்றும் அனுப்புகைகளில் இந்திய கொள்கலன் கழகம் எனப்படும் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (கான்கோர்)-ன் நிபுணத்துவம் ஆகியவற்றைக் கொண்டு பயனடைந்திட, ஹரித்துவாரில் ரயில்வே அடிப்படையிலான அனுப்புகை முனையத்தை அமைக்க உள்ளன. இதற்காக, இரு நிறுவனங்களும் கூட்டாக பெல்கான் என்ற கூட்டு செயற்குழு அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், இதன் மூலம், பெல் ஒரு புதிய வளர்ச்சிப் பகுதிக்கு நுழையும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. மேலும், இந்த முனையம் பல வகை அனுப்புகை வசதியாக உருவாக்கப்படும்.பெல்லின் சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அருகாமையிலுள்ள மாநில கட்டமைப்பு மற்றும் தொழிலக மேம்பாட்டுக் கழகத்தில் அமைந்துள்ள ஏராளமான தொழிலகங்கள் மற்றும் முனையத்திற்கு அருகிலுள்ள பிற தொழில்துறை தொகுப்புகளின் தேவைகளையும் இந்த முனையம் பூர்த்தி செய்யும். சாலை வழியாக போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்துக்கான செலவு கணிசமாக மலிவாக இருப்பதால் இந்த தொழில்கள் பெரிதும் பயனடையும். மேலும், பெல்லின் ஹரித்வார் பிரிவு, வரவிருக்கும் கிழக்கு மற்றும் மேற்குப்பிராந்தியங்களுக்கான அர்ப்பணிக்கப்பட்ட சரக்குப்பாதைகளுக்கு அருகிலேயே உள்ளது எதிர்காலத்தில் இந்தப்பாதைகளின் பயனைப் பெற சாதகமாகவும்அமைந்துள்ளது.

பெல்லின் ஹரித்துவார் பிரிவு, 1967 முதல் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அமைந்துள்ள, மூன்று உற்பத்தி அலகுகள் மற்றும் ஒரு ஆராய்ச்சி மையத்தை உள்ளடக்கிய பிஹெச்இஎல்-ன் மிகப்பெரிய உற்பத்தி பிரிவுகளில் ஒன்றாகும், நிறுவனம் ‘நாளைய பிஹெச்இஎல்-ஐ உருவாக்குவதற்கான’ ஒரு உருமாற்ற பயணத்தைத் தொடங்கியுள்ளதுடன், நிலக்கரி அல்லாத வணிகங்களான சூரியஒளி மின்னாற்றல், நீர், பாதுகாப்பு, விண்வெளி, மின்சார சேமிப்புத் தீர்வுகள், மின்வாகனங்கள், இரயில் மின்மயமாக்கல் போன்றவற்றை அதிகரிப்பதற்கான பல்வேறு பன்முகப்படுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பலவகை அனுப்புகை வசதியானது அனுப்புகை வணிகத்தில் நுழையவும், இரண்டு நிறுவனங்களுக்கும் ஆதாயம் பயப்பதாகவும், உத்தராகண்ட் தொழிலகங்களுக்கு பயனளிக்கும் விதமானதுமான ஒரு முக்கியமான நிகழ்வாகும். நாடு முழுவதும் 83 முனையங்களைக் கொண்டுள்ள ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள கான்கோர் நிறுவனம், கொள்கலன் போக்குவரத்திற்காக 300க்கும் மேற்பட்ட ரேக்குகளை வைத்திருக்கிறது.

Related Stories: