117வது பிறந்தநாள் விழா காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, ஜூலை 16: காமராஜரின் 117வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் ரோம்ஆரோக்கியராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் மாநகர செயலாளர் அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விசி மாநில துணை செயலாளர் ராஜா, தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் கணேஷ் உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: