பயன்பாடில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகள்

தா.பேட்டை, ஜூலை 16: முசிறி அருகே திருத்தியமலை ஊராட்சியில் பயன்படுத்தாமல் உள்ள குப்பைதொட்டிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முசிறி ஒன்றியம் திருத்தியமலை கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே குப்பைதொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டிகளை தெருக்களில் கொண்டு சென்று வைத்தால் பொதுமக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். இதுகுறித்து சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், தெருக்களில் வைக்க வேண்டிய குப்பை தொட்டிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே பல மாதங்களாக உள்ளது. 8 குப்பை தொட்டிகளையும் பொதுமக்கள் குப்பைகள் கொட்டும் இடத்தில் வைத்தால் சுற்றுச்சூழல் சுகாதாரமாக இருக்கும். எனவே குப்பை தொட்டிகளை மழை நீர் சேகரிப்பு தொட்டிகளாக இல்லாமல் அரசு என்ன பயன்பாட்டிற்காக குப்பை தொட்டிகளை வழங்கியதோ அதற்கு பயன்பெறும் வகையில் வைக்க வேண்டுமென என்றார்.

Advertising
Advertising

Related Stories: