முதுமலையில் விடுதி கட்டணம் குறைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கூடலூர், ஜூலை 16:முதுமலையில்  விடுதிகளின் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

 முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தங்கும் விடுதிகள் கட்டணம் தற்போது சீசன் அல்லாத காலங்களை ஒட்டி 50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. கட்டண குறைவு காரணமாக முதுமலை சுற்றுலா விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வழக்கமாக சீசன் அல்லாத காலங்களில் முதுமலை தங்கும் விடுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக குறைந்து காணப்படுவது வழக்கம்.

 மேலும் முதுமலை புலிகள் காப்பகம் கார்குடி, தெப்பக்காடு, மசினகுடி உள்ளிட்ட வனச்சரகங்களில் 50க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட 10க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.2500 முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் உள்ளது. இந்த கட்டணம் சீசன் அல்லாத காலங்களில் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதால்,  வழக்கமாக சீசன் அல்லாத காலங்களில் காலியாக கிடக்கும் விடுதிகள் தற்போது சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக புலிகள் காப்பகத்தில் சுற்றுலா வருமானமும் அதிகரித்துள்ளது.

Related Stories: