காமராஜர் பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவ,மாணவிகள் ஊர்வலம்

பரமக்குடி, ஜூலை 16:  காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பரமக்குடி அருகே பாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ,மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர். காமராஜரின் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. பேச்சு,கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கீழ முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு  தாளாளர் சாதிக்அலி தலைமை தாங்கினார். பேச்சு,கட்டுரை,கவிதை, ஒவிய போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.

கடலாடி அரசு மேல்நிலை பள்ளி, எம்.கரிசல்குளம் அரசு நடுநிலைப்பள்ளி,கடலாடி அரசு தொடக்க பள்ளி, நரசிங்க கூட்டம் அரசு தொடக்கப்பள்ளி, குருவாடி அரசு நடுநிலை பள்ளி, ஒப்பிலான் அரசு நடுநிலைப்பள்ளி, இளஞ்செம்பூர் அரசு நடுநிலைப் பள்ளி, உச்சிநத்தம் ஆறுமுக விலாஸ் இந்துமிசன் தொடக்கப்பள்ளி, முதுகுளத்தூர் அருகே மட்டியரேந்தல் புனிதசூசைப்பர் தொடக்கப்பள்ளியில் நடந்தது.

ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கமுதியில் சத்திரிய நாடார் உறவின்முறை பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வானவேடிக்கை, மேளதாளங்களுடன் காமராஜர் உருவ படம் கொண்ட அலங்கார வண்டி முன்னே செல்ல 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் ஊர்வலம் நடந்தது. கமுதியில் காமராஜர் சிலைக்கு முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் மனோகரன், பழக்கடை பாலமுருகன், நகர சிறுபாண்மையினர் பிரிவு செயலாளர் சேசுராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் பாரதிதாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: