விவசாயிகள் பங்கேற்பு பாபநாசத்தில் மழைநீருடன் சாக்கடை கலப்பதால் துர்நாற்றம்

பாபநாசம், ஜூலை 16: பாபநாசத்தில் சாக்கடையை தூர் வாராததால் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்ததால் துர்நாற்றத்தால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.பாபநாசத்தில் கடந்த சில மாதங்களாக மழையே இல்லாமல் வெயில் கடுமை காட்டி வந்தது. இந் நிலையில் நேற்று முன் தினம் மாலை ஆறரை மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. பின்னர் இரவு 9 மணிவரை தூறல் மழை பெய்தது. இதனால் வெயிலின் கடுமையால் அவதிப்பட்டு வந்த பாபநாசம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மழை விவசாயத்திற்கு உகந்தது என்று கருத்து தெரிவித்த விவசாயிகள் நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்றனர். இந்த மழையால் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் சாக்கடையை தூர் வாராத காரணத்தால் மழை நீரும், சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: