கல்வி வளர்ச்சி நாள் விழா

பாபநாசம், ஜூலை 16: பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக நேற்று கொண்டாடப் பட்டது.இதை முன்னிட்டு காமராஜர் குறித்த பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழஙகப்பட்டது. தலைமையாசிரியர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பாபநாசம் வங்காரம்பேட்டை உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாணவர்களுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.கும்பகோணம்:கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் 117 மாணவர்கள் காமராஜரை போல் வேடமணிந்து வந்து, அவரது உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.கும்பகோணம் அல்அமீன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: