புஞ்சைபுளியம்பட்டியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

சத்தியமங்கலம், ஜூலை 12: புஞ்சைபுளியம்பட்டியில் குழந்தை திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.  புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பொன்முடி (49). இவரது 17 வயது மகளுக்கும், பவானிசாகர் அடுத்த வெள்ளாளபாளையம் கிராமத்தை சேர்ந்த துரை என்பவரது 20 வயது மகனுக்கும், புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் பகுதியில் உள்ள கோவிலில் நேற்று திருமண ஏற்பாடு நடந்தது. இதுகுறித்து, தகவலறிந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள்  மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் காந்திநகர் பகுதிக்கு நேற்று சென்றனர். பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை. திருமணம் செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.பின்னர், பெற்றோர்களிடம் திருமணம் நடத்த மாட்டோம் என உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertising
Advertising

Related Stories: